Showing posts with label 176-200. Show all posts
Showing posts with label 176-200. Show all posts

Monday, December 31, 2012

பல்லவி 176: இயேசுவின் இரத்தம்


O, the Blood of Jesus! Yes it cleanses white as snow!
I bless the happy day,
When he washed my sins away!
The Blood of Jesus cleanses white as snow

இயேசுவின் இரத்தம் சுத்தமாக்குதே அறியாயோ?
இயேசுவின் இரத்தம் சுத்தமாக்குதே அறிவேன் நான்!
என் பாவத்தினின்றும், தேவ கோபத்தினின்றும்
இயேசுவின் இரத்தம் சுத்தமாக்குதே!

பல்லவி 177: சிலுவையில் இயேசு


On the cross His life did Jesus give for me
What a Saviour! Hallelujah!
There He died for me who was his enemy
What a saviour I have found

சிலுவையில் இயேசு தம் உயிர் விட்டார்
என்னை மீட்க; என்ன நேசம்!
பாவி நான் பிழைக்க ஜீவனைத் தந்த
எந்தன் நேசரைக் கண்டேன்!

Wednesday, December 26, 2012

பல்லவி 178: தேவ க்ருபை என்ன இன்பம்


தேவ க்ருபை என்ன இன்பம்!
என்ன, என்ன, என்ன இன்பம்!

பல்லவி 179: ஆம் நானும் ஆயத்தம்


              Tune 426
O I'm glad I'm ready!
Ready with the wedding garment on!
O! I'm glad I'm ready!
Fighting till I join the happy throng!

ஆம் நானும் ஆயத்தம் x 2
வெண்வஸ்திரத்தோடே ஆயத்தம்!
ஆம் நானும் ஆயத்தம் x 2
போர் புரிவேன் ஸ்வர்க்கம் போமட்டும்

பல்லவி 180: நல் மீட்பர் நோக்கி


நல் மீட்பர் நோக்கி சஞ்சலத்தைச் சொல்லுமே!
அப்போது துன்பம் இன்பமாக மாறுமே
மா துக்க காலத்தில்
நல் மீட்பர் பாதத்தில்;
மெய் தாசர் நெஞ்சின் நோவு
முற்றும் நீங்குமே!

பல்லவி 181: தேவன் எந்தனை உபயோகிக்க


I want to live right, that God may use me
At any time and any where

தேவன் எந்தனை உபயோகிக்க
ஆசிக்கிறேன், நேர்ஜீவியம்;
தேவன் எந்தனை உபயோகிக்க
எவ்வேளையும் எவ்விடத்தும்

பல்லவி 182: சேனையிலே சேனையிலே


In the Army, in the Army
We find joy, we find joy
Doing work for Jesus, doing work for Jesus
Wondrous joy, wondrous joy

சேனையிலே சேனையிலே
ஆனந்தம், ஆனந்தம்
இயேசுவை சேவித்தல் x 2
இன்பமாம், இன்பமாம்

பல்லவி 183: அற்புதன் அல்லவோ


Isn't He wonderful, wonderful, wonderful!
Isn't Jesus, my Lord, wonderful!
Eyes have seen; ears have heard,
It's recorded in God's word,
Isn't Jesus, my Lord, wonderful!

அற்புதன் அல்லவோ, அற்புதன், அற்புதன்
அற்புதன் அல்லவோ என்னேசு!
கண்டோம் கேள்விப்பட்டோம்;
வேதத்தில் வாசிக்கின்றோம்;
அற்புதன் அல்லவோ, என்னேசு

பல்லவி 184: சாகரத்தின் ஜலத்தைப்போல்


As the waters cover the sea
The earth shall be filled with the Glory of the Lord!
As the waters cover the sea

சாகரத்தின் ஜலத்தைப்போல் x 2
கர்த்தன் மகிமை நிறையுமே பூமியில்
சாகரத்தின் ஜலத்தைப்போல்

பல்லவி 185: ஜே ஜே ஜே ஜே சுவாமி


ஜே, ஜே, ஜே, ஜே சுவாமி - சொரிந்து உன் உதிரம்
தெரிந்தெனை மீட்டாயே!
அண்டலன் வலைதனிலகப்பட்டுழன்ற என்னண்டை
நீ வந்தனையே!
கண்டு என் பாவம் கழுவினாய் ஷேமம்
தொண்டு செய்வேனுமக்கே!
                                                                               நல்லதம்பி

பல்லவி 186: இயேசு நாதரண்டை வந்தேன்


இயேசு நாதரண்டை வந்தேன்
மாசற்ற இரத்தம் கண்டேன்
ஆனந்தப் பரவசமாயினேன்
ஆனந்தப் பரவசம் அல்லேலூயா
ஆனந்தப் பரவசம் ஆகினேன்

பல்லவி 187: ஆனந்தம் பாடியே


ஆனந்தம் பாடியே
ஆண்டவர் நாமத்தை போற்றிடுவோம்
தாண்டியுலகந்தனை மீண்டு ரட்சிக்கவென்றே
தரணியில் வந்த இயேசு தலைவருக்காய்;
உன்னத சேனைகள் நன்னயமாய் துதி பாடிடவே
அன்னை மரியிடமாய் முன்னணையில் பிறந்து
சின்னந்தனையழிந்த தலைவருக்காய்

பல்லவி 188: ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே


ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!
வல்லவராம் கிறிஸ்து இயேசு நல் அடிஸ்தானம்
ஆகையால் ஆனந்தமே
வன்புசல் சீறினும் பெருவெள்ளம் மோதினும்
அசைந்திடேன் ஆனந்தமே
பாறைமேல் வலியுறவே நிலைக்கும்
தீபஸ்தம்பம் போலவே நான்
ஆபத்தில் படாயுவர் இரட்சைதனைக் காண
வீசிடுவேன் காந்தி

பல்லவி 189: எப்போதுமே, எப்போதுமே


எப்போதுமே, எப்போதுமே,
எப்போதுமே இன்ப வாழ்வே
இயேசையா என்னோடிருப்பதாலே
எப்பொருளும் குப்பை போன்றனவே
மாந்தர் எல்லாரும் ஓர் நாளில் தூசி தானே
என்னருமை நேசரேசு எனக்கெல்லாம்
அவர் பின்னே எனக்கேது குறை

பல்லவி 190: துதி தங்கும் பராபரனே


துதி தங்கும் பராபரனே நராநரனே!
ஓ! தேவகுமாரா! உன்னாசிதா உதாரா!
ஜெய சைனிய வாலிப வீரா நீ
தேவ நேசம் பாராய் நீ! திரு
சச்சுதன் இயேசுவின் இரட்சிப்பின் சாட்சியம் கூற
திட தீட்சை கொள்ளுவாய் தீரா

பல்லவி 191: என் பாவங்கள் மலை போலாயிற்று


My sins rose high as mountain
They all disappeared in the fountain
He wrote my name down
For place and crown
Bless His dear name, I am free!

என் பாவங்கள் மலை போலாயிற்று - அவையாவு
மா ஊற்றண்டை மாறிற்று
என்பேரெழுதினார், மோட்ச கிரீடம் தருவார்
அவர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் x 2

பல்லவி 192: கல்வாரி மலைமட்டும் சென்றாரேசு


All the way to Calvary He went for me
He went for me, He went for me,
All the way to Calvary He went for me
And now he sets me free
O, I had so many, many sins
{O, I had so many, many doubts
O, I had so many, many fears}
But He took them all away when
He pardoned me

கல்வாரி மலைமட்டும் சென்றாரேசு!
சென்றாரேசு! சென்றாரேசு!
கல்வாரி மலைமட்டும் சென்றாரேசு!

1. என்னை விடுவிக்க
எத்தனையோ பாவம் செய்திருந்தேன்
ஆனால் நீக்கினார் யாவும் மன்னித்த போது

2. என்னை விடுவிக்க
எத்தனையோ சந்தேகம் கொண்டிருந்தேன்
ஆனால் நீக்கினார் யாவும் மன்னித்த போது

3. என்னை விடுவிக்க
எத்தனையோ திகில் கொண்டிருந்தேன்
ஆனால் நீக்கினார் யாவும் மன்னித்த போது
                                                            இவாஞ்சலின் பூத்

பல்லவி 193: ஹா, உயர்த்தினார் என்னை

He lifted me up, yes up; up from the miry clay
He lifted me up, yes up; walk the narrow way
He lifted me up, yes up; I am bound for heaven's shore,
He lifted me up, yes up; to live for evermore

ஹா, உயர்த்தினார் என்னைப் பாவ சேற்றினின்று,
ஹா, உயர்த்தினார் என்னை, செல்ல அவர் பாதை
ஹா, உயர்த்தினார் மோட்ச பிரயாணியாக
ஹா, உயர்த்தினார் ஜீவித்திட நித்தியகாலம்

பல்லவி 194: ஜெய நாளொன்று வருது

The day of victory's coming
'tis coming by and by
When to the Cross of Calvary
All nations they will fly;
We're soldiers in the Army,
We'll fight until we die;
For the day of victory's coming by and by

ஜெய நாளொன்று வருது
அதி சீக்கிரத்திலே;
அப்போது நானா ஊரார்
கல்வாரிக் குருசிலே
அடைக்கலத்தைப் பெறுவார்
திடன் நல் வீரரே!
நிலைத்துப் போர் செய்வோம்
ஜெயம் வந்திடும்!

பல்லவி 195: போர் செய்வோம், பின் வாங்கோம்


              Tune: Sweet Marie
போர் செய்வோம், பின் வாங்கோம்!
போர் செய்வோம், ஜெயம் பெற,
யுத்தப்பியாச சாலையோர் போர் செய்வோம்
என்ன துன்பம் வந்தாலும்
யார் யார் என்ன சொன்னாலும்,
என்ன நஷ்டம் வந்தாலும்
போர் செய்வோம்