Showing posts with label 126-150. Show all posts
Showing posts with label 126-150. Show all posts

Tuesday, January 8, 2013

பல்லவி 126: கஷ்ட துன்ப பாதையில்

When the road we tread is rough,
Let us bear in mind,
In our Saviour strength enough
We may always find;
Though the fighting may be tough,
Let our motto be
'Go on, go on to victory'

கஷ்ட துன்ப பாதையில்
நடந்திடினும்,
நம் மீட்பர் பலம் போதும்
என்றறிவோமே,
போர் அகோர நாட்களில்,
எப்போதும் செல்வோம்!செல்வோம்! செல்வோம்!
ஜெயம் பெற

பல்லவி 127: யூதாவின் சிங்கம்

The Lion of Judha shall break every chain
And give, us the victory again and again

யூதாவின் சிங்கம் பாவக் கட்டறுப்பார்
மாறாதென்றும் ஜெயம் தருவார்

பல்லவி 128: என் இயேசு என் இயேசு

He is mine, He is mine
Loving me, seeking me
Finding me, keeping me
He is mine

என் இயேசு, என் இயேசு!
நேசித்துத் தேடியே இரட்சித்துக் காக்கிறார்
என் இயேசு!

பல்லவி 129: வாக்குத்தத்தம் நம்பிக்கையால்

Faith, mighty faith, the promise sees,
And looks to that alone;
Laughs at impossibilities
And cries, It shall be done!

வாக்குத்தத்தம் நம்பிக்கையால்
சமீபம் ஆகுது;
ஓயா விஸ்வாச ஜெபத்தால்
தடைகள் நீங்குது

பல்லவி 130: நேற்றும் இன்றும் என்றும்

Yesterday, to-day, forever,
Jesus is the same;
We may change, but Jesus never
Glory to His name!

நேற்றும் இன்றும் என்றும் மாறார்
இயேசு இரட்சகர்!நாம் மாறினாலும் அவர் மாறார்
அவர்க்கு ஸ்தோத்திரம்

பல்லவி 131: என் இரட்சகராம் இயேசு

My Jesus is aye the same!
Jesus is aye the same!
His love to me never changes
Jesus is aye the same!

என் இரட்சகராம் இயேசு
என்றுமவர் மாறார்!என்னிலவர் கொண்ட அன்பும்
என்றும் நிலைத்திடும்!

பல்லவி 132: மனம் மாறி இரட்சிக்கப்பட்டேன்

மனம் மாறி இரட்சிக்கப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தால்

பல்லவி 133: சிலுவையில் இயேசு சிந்தின ரத்தத்தால்

By the Blood my saviour shed upon the tree
He redeemed me;
By the Blood my saviour shed upon the tree
I am now from sin set free

சிலுவையில் இயேசு சிந்தின ரத்தத்தால்
என்னை மீட்டார், அல்லேலூயா!
சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்
பாவ மன்னிப்பு தந்தார்!

பல்லவி 134: மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்

மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தால்!
அல்லேலூயா, இயேசுவுக்கு
அல்லேலூயா, ஆமென்

பல்லவி 135: ஓ! என்ன மகிழ்ச்சி இது!

      Tune Always Cheerful
! என்ன மகிழ்ச்சி இது!
என் பாவம் போக்கினாரே
இப்போ நான் மோட்சப் பிரயாணி
இயேசுவின் அன்பினாலே

பல்லவி 136: நம்பினேன் நம்பினேன்

நம்பினேன், நம்பினேன், இயேசுநாதரையா!
தேவாதி தேவா! தேவ குமாரா!

பல்லவி 137: நேச இயேசு கல்வாரியில்

Dear Jesus died on Calvary
He died for you and He died for me,
And he died for all
I love the name of Jesus
More than all

நேச இயேசு கல்வாரியில் x 2
உனக்காய் மரித்தார்;
எனக்காய் மரித்தார்;
எல்லாரையும் மீட்க
நேச இயேசு கல்வாரியில் உதிரம் சிந்தினார்
 

பல்லவி 138: அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா, அல்லேலூயா
இயேசு நாமத்திற்கு;
ஆமென் ஆமென் ஜெயம் ஜெயம்
என்றுமவர்க்கு

பல்லவி 139: நம்புகிறேன் நான்

I do believe it! I do believe it!
I'm saved through the Blood of the Lamb
My happy soul is free
For the Lord has pardoned me,
Hallelujah to Jesus' name!

நம்புகிறேன் நான், நம்புகிறேன் நான்,
மீட்பர் எனக்காய் மரித்தார்,
பாவம் மன்னித்தவர்,
சமாதானத்தை தந்தார்;
அல்லேலூயா கீதம் பாடுவேன்

பல்லவி 140: இன்ப நாள் இன்ப நாள்

Happy day! When Jesus washed my sins away
He taught me how to watch and pray
And live rejoicing everyday
Happy day! When Jesus washed my sins away

இன்ப நாள்! இன்ப நாள்,
என் பாவம் தீர்ந்து போன நாள்
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள் இன்ப நாள்
என் பாவம் தீர்ந்து போன நாள்!

பல்லவி 141: நான் இயேசு நாமத்தில் கூப்பிட்டேன்

I called upon the name of the Lord
And He helped me, He helped me,
I called upon the name of the Lord,
And He helped me

நான் இயேசு நாமத்தில் கூப்பிட்டேன்
ஜெபங் கேட்டார், துணை செய்தார்;
நான் இயேசு நாமத்தில் கூப்பிட்டேன்
துணை செய்தார்

பல்லவி 142: மீட்படைந்தேன் ரத்தத்தால் தான்

Blessedly saved, saved by the blood,
Blessedly saved by the blood of the Lamb;
Happy and free, Jesus with me;
Blessedly saved, blessedly kept, yes I am

மீட்படைந்தேன் ரத்தத்தால் தான்
மீட்பரின் திரு ரத்தத்தினால்
சந்தோஷமே இயேசுவுடன்!மீட்கப்பட்டு, காக்கப்பட்டு நிற்கிறேன்

பல்லவி 143: பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார்

Gone is my burden - He rolled it away
Opened eyes to the light of the day
Now in the fullness of joy I can say
I'm happy, I'm happy in Jesus!

பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார்,
காரிருள் போக்கி ஒளியைத் தந்தார்,
இப்போ என் நம்பிக்கைப் பாட்டிதுவே
இயேசு என் இரட்சண்ய மூர்த்தி!

பல்லவி 144: வல்லவர் இரட்சகர் நீரே

Thou art a mighty Saviour
Thy love doth never waver;
Thou shalt be mine forever,
And thine alone I'll be

வல்லவர் இரட்சகர் நீரே
உமதன்பென்றும் மாறாதே;
எப்போதும் நீரென் சொந்தமே
நானும் உம் சொந்தமே!

பல்லவி 145: நேசிக்கிறேன் நான் இயேசுவை

I love Him better everyday x 2
Close by His side, there I'll abide
I love Him better everyday

நேசிக்கிறேன் நான் இயேசுவை
முன்னிலும் இப்போ அதிகம்
தங்கிடுவேன் அவரருகில்
நேசிக்கிறேன் நான் இயேசுவை