Showing posts with label ஸ்தோத்திரமும் சாட்சியும். Show all posts
Showing posts with label ஸ்தோத்திரமும் சாட்சியும். Show all posts

Tuesday, January 8, 2013

பல்லவி 132: மனம் மாறி இரட்சிக்கப்பட்டேன்

மனம் மாறி இரட்சிக்கப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தால்

பல்லவி 133: சிலுவையில் இயேசு சிந்தின ரத்தத்தால்

By the Blood my saviour shed upon the tree
He redeemed me;
By the Blood my saviour shed upon the tree
I am now from sin set free

சிலுவையில் இயேசு சிந்தின ரத்தத்தால்
என்னை மீட்டார், அல்லேலூயா!
சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்
பாவ மன்னிப்பு தந்தார்!

பல்லவி 134: மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்

மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தால்!
அல்லேலூயா, இயேசுவுக்கு
அல்லேலூயா, ஆமென்

பல்லவி 135: ஓ! என்ன மகிழ்ச்சி இது!

      Tune Always Cheerful
! என்ன மகிழ்ச்சி இது!
என் பாவம் போக்கினாரே
இப்போ நான் மோட்சப் பிரயாணி
இயேசுவின் அன்பினாலே

பல்லவி 136: நம்பினேன் நம்பினேன்

நம்பினேன், நம்பினேன், இயேசுநாதரையா!
தேவாதி தேவா! தேவ குமாரா!

பல்லவி 137: நேச இயேசு கல்வாரியில்

Dear Jesus died on Calvary
He died for you and He died for me,
And he died for all
I love the name of Jesus
More than all

நேச இயேசு கல்வாரியில் x 2
உனக்காய் மரித்தார்;
எனக்காய் மரித்தார்;
எல்லாரையும் மீட்க
நேச இயேசு கல்வாரியில் உதிரம் சிந்தினார்
 

பல்லவி 138: அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா, அல்லேலூயா
இயேசு நாமத்திற்கு;
ஆமென் ஆமென் ஜெயம் ஜெயம்
என்றுமவர்க்கு

பல்லவி 139: நம்புகிறேன் நான்

I do believe it! I do believe it!
I'm saved through the Blood of the Lamb
My happy soul is free
For the Lord has pardoned me,
Hallelujah to Jesus' name!

நம்புகிறேன் நான், நம்புகிறேன் நான்,
மீட்பர் எனக்காய் மரித்தார்,
பாவம் மன்னித்தவர்,
சமாதானத்தை தந்தார்;
அல்லேலூயா கீதம் பாடுவேன்

பல்லவி 140: இன்ப நாள் இன்ப நாள்

Happy day! When Jesus washed my sins away
He taught me how to watch and pray
And live rejoicing everyday
Happy day! When Jesus washed my sins away

இன்ப நாள்! இன்ப நாள்,
என் பாவம் தீர்ந்து போன நாள்
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள் இன்ப நாள்
என் பாவம் தீர்ந்து போன நாள்!

பல்லவி 141: நான் இயேசு நாமத்தில் கூப்பிட்டேன்

I called upon the name of the Lord
And He helped me, He helped me,
I called upon the name of the Lord,
And He helped me

நான் இயேசு நாமத்தில் கூப்பிட்டேன்
ஜெபங் கேட்டார், துணை செய்தார்;
நான் இயேசு நாமத்தில் கூப்பிட்டேன்
துணை செய்தார்

பல்லவி 142: மீட்படைந்தேன் ரத்தத்தால் தான்

Blessedly saved, saved by the blood,
Blessedly saved by the blood of the Lamb;
Happy and free, Jesus with me;
Blessedly saved, blessedly kept, yes I am

மீட்படைந்தேன் ரத்தத்தால் தான்
மீட்பரின் திரு ரத்தத்தினால்
சந்தோஷமே இயேசுவுடன்!மீட்கப்பட்டு, காக்கப்பட்டு நிற்கிறேன்

பல்லவி 143: பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார்

Gone is my burden - He rolled it away
Opened eyes to the light of the day
Now in the fullness of joy I can say
I'm happy, I'm happy in Jesus!

பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார்,
காரிருள் போக்கி ஒளியைத் தந்தார்,
இப்போ என் நம்பிக்கைப் பாட்டிதுவே
இயேசு என் இரட்சண்ய மூர்த்தி!

பல்லவி 144: வல்லவர் இரட்சகர் நீரே

Thou art a mighty Saviour
Thy love doth never waver;
Thou shalt be mine forever,
And thine alone I'll be

வல்லவர் இரட்சகர் நீரே
உமதன்பென்றும் மாறாதே;
எப்போதும் நீரென் சொந்தமே
நானும் உம் சொந்தமே!

பல்லவி 145: நேசிக்கிறேன் நான் இயேசுவை

I love Him better everyday x 2
Close by His side, there I'll abide
I love Him better everyday

நேசிக்கிறேன் நான் இயேசுவை
முன்னிலும் இப்போ அதிகம்
தங்கிடுவேன் அவரருகில்
நேசிக்கிறேன் நான் இயேசுவை

பல்லவி 146: இயேசு என்னை மீட்டார்

Jesus has redeemed me
Through Him I found mercy;
He gave up His life that I from sin mighty be free;
Jesus has redeemed me
Through Him I found mercy;
For ever in Glory with Him I shall be

இயேசு என்னை மீட்டார்,
என்மேல் தயை கூர்ந்தார்
என் பாவம் போக்க அவர் தம் உயிர் விட்டார்
இயேசு என்னை மீட்டார்,
என்மேல் தயை கூர்ந்தார்
அவருக்குள் என்றும் நான் களிகூர்வேன்

பல்லவி 147: ஜீவ ஊற்றண்டை

Down at the Fountatin flowing so free;
Jesus is sweetly speaking to me,
Lifting the burden off from my soul
Bidding my spirit rise and be whole

ஜீவ ஊற்றண்டை நான் விழுந்தேன்
இயேசுவின் இன்ப சத்தம் கேட்டேன்
என் பாவப்பாரம் நீக்கிவிட்டு
"சுகத்துடன்" நீ போ என்கிறார்

பல்லவி 148: பாடுவோம் அல்லேலூயா

We'll all shout Hallelujah,
As we march along the way;
And we'll sing Redeeming Love,
With the shining hosts above,
And with Jesus we'll be happy all the day

பாடுவோம் அல்லேலூயா,
இந்த இரட்சிப்புக்காக
இயேசு நேசம் பாடுவோம்
மீட்கப்பட்டோர் கூடுவோம்
இயேசுவோடு எப்போதும்
சந்தோஷிப்போம்

பல்லவி 149: ஓர் அற்புத இரட்சகர் இயேசு

A wonderful saviour is Jesus
Clenasing the soul
Making it whole;
A wonderful Saviour is Jesus
I've proved He is mighty to save

ஓர் அற்புத இரட்சகர் இயேசு!ஆத்மத்தை
சுத்தி செய்வார்,
ஓர் அற்புத இரட்சகர் இயேசு!
என்னையும் மீட்டுக்கொண்டார்

பல்லவி 150: இயேசுவை மறவாதே

இயேசுவை மறவாதே
இயேசுவை மறவாதே
இரவும் பகலும் காத்திடுவார்
இயேசுவை மறவாதே

பல்லவி 151: ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம்
அருளானந்தம் ஜீவானந்தம்